/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்ணிவாக்கம் தாவர தோட்டம் மத்திய அரசு செயலர் பார்வை
/
மண்ணிவாக்கம் தாவர தோட்டம் மத்திய அரசு செயலர் பார்வை
மண்ணிவாக்கம் தாவர தோட்டம் மத்திய அரசு செயலர் பார்வை
மண்ணிவாக்கம் தாவர தோட்டம் மத்திய அரசு செயலர் பார்வை
ADDED : ஏப் 29, 2025 11:53 PM

செங்கல்பட்டு, மண்ணிவாக்கம் ஊராட்சி வளாகத்தில் உள்ள தாவர தோட்டத்தை, மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஸ்ரீசைலேஷ்குமார் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மண்ணிவாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி வளாகத்தில், தாவர தோட்டம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தோட்டம் மற்றும் ஊராட்சி பதிவேடுகளை, மத்திய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஸ்ரீசைலேஷ்குமார், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கமிஷனர் பொன்னையா, கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.