/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கோவிலில் மார்கழி கிருத்திகை விழா
/
திருப்போரூர் கோவிலில் மார்கழி கிருத்திகை விழா
ADDED : ஜன 01, 2026 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மார்கழி கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மார்கழி மாத கிருத்திகை விழா, விமரிசையாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில், கோவில் நடை திறக்கப்பட்டது. புத்தாண்டு மற்றும் கிருத்திகை விழாவால் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். மாலையில் கந்தசுவாமி பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

