ADDED : ஜன 01, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையில் புதிதாக 'பாடி' கட்டப்பட்ட சென்னை மாநகர தாழ்தள பேருந்து, சென்னை குரோம்பேட்டை பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.
மதுராந்தகம் அருகே, நேற்று காலை 8:00 மணிக்கு திருவண்ணா மலையில் இருந்து வந்த தனியார் பேருந்து பின்பக்கம் மோதியதில் தாழ்தள பேருந்து, ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது.
இதனால், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் போலீசார், அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

