/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டருக்கு கந்தசுவாமி கோவிலில் திருமணம்
/
செங்கை கலெக்டருக்கு கந்தசுவாமி கோவிலில் திருமணம்
ADDED : பிப் 10, 2025 11:58 PM

திருப்போரூர், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜூக்கு திருமணம் நடந்தது.
இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார்.
கலெக்டர் அருண்ராஜ், மேகநாதன் -- ஜெயந்தி தம்பதி மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் இரு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நேற்று காலை திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணத்தையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.உற்சவர் மண்டபத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருமண விழாவில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டார் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பு விழா வரும் 14 ம் தேதி மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடக்கிறது. நேற்று கலெக்டர் திருமணம் தவிர, 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நடந்தது.

