/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்
ADDED : பிப் 17, 2024 01:29 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா, விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டில், இவ்விழா நேற்று நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டை அடித்து, சரவணப்பொய்கையில் நீராடி, கந்தனை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
பிரதான கிருத்திகையை ஒட்டி, மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில், பக்தர்கள் தங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
காவடி மண்டபத்தில் இருந்து பலவிதமான காவடிகள் புறப்பாடு, மாடவீதிகளில் சென்றன. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் வழிபட்டனர். செங்கை, காஞ்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வந்திருந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஓ.எம்.ஆர்., சாலை, மாடவீதிகளுக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
கிளி வாகனத்தில் கந்தபெருமான்
திருப்போரூரில் மாசி பிரம்மோற்சவ பெரு விழாவில் முதல் நாள் உற்சவமான நேற்று முன் தினம் இரவு, கிளி வாகனத்தில் கந்தபெருமான் வீதியுலா வந்தார்.
பிரதான விழாவான தேர் திருவிழா, வரும் 21 ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.