/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முகமூடி கொள்ளையர் ஆத்துாரில் அச்சம்
/
முகமூடி கொள்ளையர் ஆத்துாரில் அச்சம்
ADDED : ஏப் 08, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆத்துார் தோட்டகார வீதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர்.
அப்போது அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே, தப்பி ஓடினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஆத்துார், திம்மாவரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு, கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எனவே, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.