/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 01, 2025 01:14 AM

திருப்போரூர்:திருப்போரூரில், ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம், நடந்தது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், திருப்போரூரில் நேற்று, செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் குமரன் தலைமை தாங்கினார். நகர செயலர் விஜயகுமார் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலர் தேசிங்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் சம்சுதீன், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் லோகநாதன், மாவட்ட முன்னாள் பொருளாளரும், திருப்போரூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவருமான சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதிய உறுப்பினர்களை ம.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும். வரும் செப்., 15ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்த நாள் மாநாட்டில், அனைவரும் பங்கேற்க வேண்டும்.
நகர, ஒன்றியங்களில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். 2026 சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தி.மு.க.,வுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆலத்துார் சிட்கோ, சிறுசேரி சிப்காட் தொழில் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ம.தி.மு.க.,வினர், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், சித்தாமூர் ஒன்றிய செயலர் சாஞ்சி சேகர் நன்றி கூறினார்.