/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னல் சித்தாமூரில் மருத்துவ முகாம்
/
மின்னல் சித்தாமூரில் மருத்துவ முகாம்
ADDED : செப் 22, 2024 03:38 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, மின்னல் சித்தாமூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நேற்று, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் கீழ், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம், நடந்தது.
மின்னல் சித்தாமூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், அச் சிறுபாக்கம் வட்டார மருத்துவமனை குழு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் குழு பங்கேற்றது.
இதில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், துாய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே 'துாய்மையே சேவை இயக்கம் - 2025' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்வில், ஊராட்சி தலைவர் பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம்,வட்டார மருத்துவர் சுரேஷ், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.