/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துார் ஊராட்சியில் மருத்துவ முகாம்
/
ஆத்துார் ஊராட்சியில் மருத்துவ முகாம்
ADDED : அக் 06, 2024 01:20 AM

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில், நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையில் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், ஆத்துார், வில்லியம்பாக்கம், திம்மாவரம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
முகாமில், மருத்துவ பரிசோதனை செய்து, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், முதியவர்களுக்கு மருந்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பகுதிவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.