/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவ காப்பீடு பதிவில் வீடு தேடி மருத்துவக்குழு
/
மருத்துவ காப்பீடு பதிவில் வீடு தேடி மருத்துவக்குழு
மருத்துவ காப்பீடு பதிவில் வீடு தேடி மருத்துவக்குழு
மருத்துவ காப்பீடு பதிவில் வீடு தேடி மருத்துவக்குழு
ADDED : ஜன 09, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம் : பிரதமர் மக்கள் ஆரோக்கியம் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு என, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிற்கு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தினர் முகாம் ஏற்பாடு செய்து, அதற்காக ஒப்பந்த நபர்களை நியமிப்பர். ஒப்பந்த நபர்கள், பொது மக்களிடம் ஆதார் எண் பெற்று, காப்பீடு அட்டை பதிந்தனர்.
அதற்காக, கட்டாய பணம் வசூலிப்பதாக, பல பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தனியாரை தவிர்த்து, வீடு தேடி மருத்துவ குழுவினரை நியமித்து, இக்குழுவினர் வீடுதோறும் சென்று, ஆதார் எண் பெற்று பதிந்து வருகின்றனர்.