/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 36 பகுதியில் நாளை 'மெகா' மின்தடை
/
கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 36 பகுதியில் நாளை 'மெகா' மின்தடை
கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 36 பகுதியில் நாளை 'மெகா' மின்தடை
கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 36 பகுதியில் நாளை 'மெகா' மின்தடை
ADDED : மார் 20, 2025 09:05 PM
கூடுவாஞ்சேரி:'அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட, 36 இடங்களில், நாளை மின்தடை ஏற்படும்' என, மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மறைமலைநகர் உட்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி கோட்டத்தில் உள்ள 33 'கிலோ வாட்' துணை மின் நிலையம் உள்ளது.
இதில், அவசர கால பராமரிப்பு பணி, நாளை சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறுகிறது.
இதனால் கூடுவாஞ்சேரி, நந்திவரம், மகாலட்சுமி நகர், நாராயணபுரம், பெரியார் நகர், டி.டி.சி., நகர், ஜவஹரியா நகர், கபாலி நகர், சிற்பி நகர், கன்னியப்பன் நகர், காமாட்சி நகர், பிரியா நகர், கணபதி நகர், சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
தவிர, நடராஜபுரம், ஜி.எஸ்.டி., சாலை ஒரு பகுதி, சதுரப்பன் தாங்கல், ராணி அண்ணா நகர், பாலாஜி நகர், விஷ்ணு பிரியா நகர், காமராஜபுரம், வைகை நகர், அண்ணா நகர், பெருமாட்டுநல்லுார், தங்கபாபுரம், பாண்டூர், மூலக்கழனி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, காரணைப் புதுச்சேரி, அய்யஞ்சேரி, ஊரப்பாக்கம், எம்.ஜி., நகர், ஆதனுார் மற்றும் அதன் சுற்று பகுதியிலும் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.