/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கோவிலுக்கு மேனா பல்லக்கு உபயம்
/
மாமல்லை கோவிலுக்கு மேனா பல்லக்கு உபயம்
ADDED : ஏப் 06, 2025 02:03 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு, பங்குனி உத்திர உற்சவ மேனா பல்லக்கு உபயமாக அளிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வீற்றுள்ள நிலமங்கை தாயாருக்கு, 10 நாட்கள் பங்குனி உத்திரம் உற்சவம் நடத்தப்படும். இந்த உற்சவம், கடந்த 2ம் தேதி துவங்கியது.
அதைத்தொடர்ந்து, 11ம் தேதி வரை, தினசரி திருமஞ்சனம் நடந்து, பல்லக்கில் கோவிலில் உள்புறப்பாடு உலா செல்கிறார்.
ஒவ்வொரு நாள் உலாவிற்கும், பிரத்யேக பல்லக்கில் சேவையாற்றுவார். மூன்றாம் நாள் உற்சவத்திற்கு பல்லக்கு இல்லாத நிலையில், உற்சவ உபயதாரர் பரமேஸ்வரன் மரத்தாலான மேனா பல்லக்கை, உபயமாக அளித்தார். நேற்று முன்தினம் இரவு, நாச்சியார் திருக்கோல தாயார், புதிய பல்லக்கில் உள் புறப்பாடு சென்றார்.