/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வணிகர் சங்க பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
/
வணிகர் சங்க பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், காஞ்சி மண்டல தலைவர் அமல்ராஜ் தலைமையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வாடகை மீதான 18 சதவீதம் வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும், 'ஆன்லைன்' வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.