/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெட்ரோ ரயில் மேம்பால பாதை ஓ.எம்.ஆரில் பணிகள் தீவிரம்
/
மெட்ரோ ரயில் மேம்பால பாதை ஓ.எம்.ஆரில் பணிகள் தீவிரம்
மெட்ரோ ரயில் மேம்பால பாதை ஓ.எம்.ஆரில் பணிகள் தீவிரம்
மெட்ரோ ரயில் மேம்பால பாதை ஓ.எம்.ஆரில் பணிகள் தீவிரம்
ADDED : பிப் 10, 2025 11:56 PM

சென்னை, சென்னையில் இரண்டாம் கட்டமாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 116 கி.மீ., துாரத்திற்கு, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.
மாதவரம் - தரமணி இடையே, 21 கி.மீ.,க்கு 82 அடி ஆழத்தில், 82 அடி அகலத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த தடத்தின் ஒரு பகுதியாக, ஓ.எம்.ஆர்., சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளில், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட துாண்களில், ராட்சத இயந்திரங்கள் வாயிலாக, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு வழித்தடமான மாதவரம் - தரமணி இடையேயான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள், எந்த பாதிப்பும் இன்றி நடக்கின்றன.
இதே போல், தரமணியில் இருந்து சோழிங்கநல்லுார் வழியாக, சிறுசேரி வரையில் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க, 200க்கும் மேற்பட்ட துாண்கள் அமைக்கப்பட்டன.
தற்போது, இந்த துாண்களை இணைத்து மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்தவுடன், ரயில் பாதை அமைக்கும் பணியை துவங்குவோம்.
கட்டுமான பணியின்போது சேதமடைந்த சாலைகளும், தற்போது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த தடத்தில் மெட்ரோ பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.