ADDED : மே 18, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தலுார் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி மற்றும் செயல் விளக்கம் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சென்னை மண்டல கண்காணிப்பு பொறியாளர் அருள் போஸ்கோ தலைமை வகித்தார்.
தத்தலுார் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.
தொடர்ந்து வேளாண் துறை பொறியாளர்கள், நுண்ணுயிர் பாசன விநியோக நிறுவன பொறியாளர்கள், நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து செய்து காண்பித்தனர்.
வேளாண் உதவி பொறியாளர் பிரின்ஸ் முத்துராஜ், சுகுமார், துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.