/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பால் வியாபாரிக்கு '7 ஆண்டு'
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பால் வியாபாரிக்கு '7 ஆண்டு'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பால் வியாபாரிக்கு '7 ஆண்டு'
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பால் வியாபாரிக்கு '7 ஆண்டு'
ADDED : மார் 14, 2024 10:49 PM
செங்கல்பட்டு:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், பால் வியாபாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் தர்காஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 2018ம் ஆண்டு, ஜூன் மாதம் 17ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கேசவன், 24, என்ற பால் வியாபாரி, சிறுமியை கடத்திச்சென்று, வனப்பகுதியில் பாலியல் தொந்தரவு செய்தார்.
இதுகுறித்த புகாரின்படி, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கேசவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பாளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 50,000 ரூபாய், தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பின், மருத்துவ பரிசோதனைக்குப்பின், கேசவன் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

