/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணி வாகனம் அமைச்சர் துவக்கினார்
/
துாய்மை பணி வாகனம் அமைச்சர் துவக்கினார்
ADDED : நவ 03, 2025 10:42 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில், துாய்மை பணி வாகனத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்திற்கு தனியார் வங்கி சார்பில், சமூக மேம்பாட்டு நிதி, 37 லட்சம் ரூபாயில், சாலைகளை துாய்மைப்படுத்தும் வாகனம் வழங்கப்பட்டது.
இதன் துவக்க விழா, மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் வாகனத்தை துவக்கி வைத்தார்.

