/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேவராஜனார் தெருவில் சிறுபால பணி துவக்கம்
/
தேவராஜனார் தெருவில் சிறுபால பணி துவக்கம்
ADDED : ஜூலை 21, 2025 01:29 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு தேவராஜனார் தெருவில், சிறுபாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு, வேதாசலம் நகரில் உள்ளது தேவராஜனார் தெரு. இவ்வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள், புதிய பேருந்து நிலையம் செல்கிறது. இதுமட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் வங்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேற்கண்ட பகுதியில், சிறு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, ஒருபுறமும் இடிந்து விழுந்தது. இதை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, நகராட்சி பொது நிதியில் இருந்து, சிறுபாலம் கட்ட 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.