/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவு காப்பகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
இரவு காப்பகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 09, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:சென்னை மற்றும் புறநகரில் உள்ள வீடற்றோர் காப்பகங்கள் கண்காணிக்கப்படுவதில்லை.
இதனால், சாலையோரம் துாங்குவதையே பலரும் விரும்புகின்றனர் என்பது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, தாம் பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், டி.டி.கே., நகரில் உள்ள வீடற்றோர் காப்பகத்தில், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, நேற்று ஆய்வு செய்தார்.
அந்த கட்டடத்தை சீரமைத்து, சாலையோரம் தங்குவோரை அழைத்து வந்து, காலை, இரவு உணவு வழங்கி, அவர்கள் தங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அவர் உத்தரவிட்டார்.