/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேற்கு வங்க இளைஞரிடம் மொபைல் போன் பறிப்பு
/
மேற்கு வங்க இளைஞரிடம் மொபைல் போன் பறிப்பு
ADDED : செப் 11, 2025 01:28 AM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், மேற்கு வங்க மாநில இளைஞரிடம் மொபைல்போன் பறித்த மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுல்தான் ஷேக், 33.
இவர், சிங்கபெருமாள்கோவில், சக்தி நகரில் தங்கி கட்டட வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், சுல்தான் ஷேக் வேலை முடிந்து, அதே பகுதியில் உள்ள காய்கறி கடைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது, பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், கத்தியைக் காட்டி மிரட்டி, சுல்தான் ஷேக்கிடமிருந்து மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.