/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வாலிபரிடம் மொபைல்போன் ஆட்டை
/
செங்கையில் வாலிபரிடம் மொபைல்போன் ஆட்டை
ADDED : பிப் 13, 2025 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி,34.
இவர் நேற்று முன்தினம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, மொபைல்போனில் பேசியபடி சென்றபோது, பின்னால் 'பஜார் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், குருமூர்த்தியின் 'சாம்சங்' மொபைல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து குருமூர்த்தி அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.