/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்
/
7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்
7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்
7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்
ADDED : ஜூலை 07, 2025 01:43 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில், 1 கோடி ரூபாய் செலவில், ஏழு இடங்களில் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன.
இதில், நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்களில், பயணியரின் வசதிக்காக பேருந்து நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம் - தாம்பரம் மார்க்கம், கிஷ்கிந்தா சாலை - எம்.ஜி.ஆர்., சிலை அருகில், முடிச்சூர் சாலை - காமராஜர் நெடுஞ்சாலை சந்திப்பு, சமத்துவ பெரியார் சாலை - கிஷ்கிந்தா சாலை சந்திப்பு.
இரும்புலியூர் நிறுத்தம் - பெருங்களத்துார் மார்க்கம், பீர்க்கன்காரணை நிறுத்தம் - செங்கல்பட்டு மார்க்கம், புதுபெருங்களத்துார் நிறுத்தம் - தாம்பரம் மார்க்கம் ஆகிய ஏழு இடங்களில், தலா 14.30 லட்சம் ரூபாய் செலவில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.