/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொண்டமங்கலத்தில் குரங்குகள் தொல்லை
/
கொண்டமங்கலத்தில் குரங்குகள் தொல்லை
ADDED : ஜன 25, 2025 12:22 AM

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயம் மற்றும் கூலி வேலையே பிராதான தொழில்.
இந்த கிராமத்தில் குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஓடி விடுகின்றன.
தெருக்களில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தி உணவு பொருட்களை பறித்து செல்கின்றன.
வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை, வாழை மற்றும் பூச்செடிகளை சேதப்படுத்துகின்றன. மொட்டை மாடியில் பொருட்களை காய வைக்கும் போது குரங்குகள் அவற்றை சேதப்படுத்துகின்றன.
இதன் காரணமாக பொருளோடு சேர்ந்து அப்பகுதி மக்களும் வெயிலில் காவலுக்கு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

