/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருத்தணியில் 12 பேரை கடித்து குதறிய குரங்குகள்
/
திருத்தணியில் 12 பேரை கடித்து குதறிய குரங்குகள்
ADDED : ஜன 20, 2025 11:43 PM
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகளவில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று, 10க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற மக்களை துரத்தி கடித்தன. இதில், 10 - 65 வயதுடைய 12 பேரை நேற்று காலை, குரங்குகள் துரத்தி கடித்தன.
இதில், காயமடைந்தவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று வீடுகளுக்கு திரும்பினர்.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, ஆந்திர மாநில வனப்பகுதியில் விட வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.