/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்
/
செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்
செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்
செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்
ADDED : நவ 18, 2025 03:46 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில், குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டுமென, விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. சென்னேரி, கொட்டமேடு, பெருந்தண்டலம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், திருப்போரூர் கூட்டுச்சாலை அருகே, சாலையின் இருபுறமும் 1.5 கி.மீ., துாரம் காப்புக்காடு உள்ளது.
இதில், சாலையோரம் உள்ள மரங்களில் தஞ்சமடைந்துள்ள, 50க்கும் மேற்பட்ட குரங்குகள், சாலையின் குறுக்கே இருபுறமும் சென்று வருவதால், விபத்தில் சிக்கி வருகின்றன.
புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, இந்த பகுதியில் குரங்குகள் இருப்பது தெரியாது. அதனால், விபத்தில் சிக்கி அடிக்கடி குரங்குகள் இறக்கின்றன.
வாகன ஓட்டிகள் சிலர் குரங்குகளுக்கு உணவு பொருட்கள் தருவதால், அவை வாகனங்களின் பின்னே தொடர்ந்து செல்கின்றன. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிபடுகின்றன.
எனவே, குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்பு பலகை அமைக்க, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

