/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூணங்கரணை சாலையில் திரியும் குரங்குகளால் விபத்து அபாயம்
/
கூணங்கரணை சாலையில் திரியும் குரங்குகளால் விபத்து அபாயம்
கூணங்கரணை சாலையில் திரியும் குரங்குகளால் விபத்து அபாயம்
கூணங்கரணை சாலையில் திரியும் குரங்குகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 17, 2025 07:53 AM

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த கூணங்கரணை பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கி.மீ., நீள மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தினமும் இச்சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில், காட்டுப்பகுதியில் இருந்து உணவு தேடி, குடியிருப்பு பகுதிகளுக்கு குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. குறிப்பாக, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகள், குரங்குகளுக்கு தின்பண்டங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொட்டலங்களை வீசிச் செல்வதால், குரங்குகள் தொடர்ந்து சாலையில் உலா வருகின்றன.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் புதிதாக சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், குரங்கள் வருவது தெரியாமல் அவற்றின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுத்து, சாலையில் உலா வரும் குரங்குகளை கட்டுப்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

