/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலி நகைகளை அடகு வைத்தவர்கள் சிக்கினர்; 'மாஸ்டர் மைண்ட்' எங்கே?
/
போலி நகைகளை அடகு வைத்தவர்கள் சிக்கினர்; 'மாஸ்டர் மைண்ட்' எங்கே?
போலி நகைகளை அடகு வைத்தவர்கள் சிக்கினர்; 'மாஸ்டர் மைண்ட்' எங்கே?
போலி நகைகளை அடகு வைத்தவர்கள் சிக்கினர்; 'மாஸ்டர் மைண்ட்' எங்கே?
ADDED : பிப் 10, 2025 11:47 PM

விருகம்பாக்கம்,சாலிகிராமம், மதியழகன் நகரைச் சேர்ந்தவர் வீரம்சந்த், 44. இவர், தசரதபுரத்தில், 'சுலிலா' என்ற அடகு கடையை, 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, நேற்று முன்தினம் மாலை வந்த வாலிபர், 3 சவரன் நகைகளை அடகு வைத்து, 1.20 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
முன்பின் தெரியாத நபர் என்பதால், 'எனக்கு தெரிந்த யாராவது சிபாரிசு செய்ய வேண்டும்' என, அடகு கடை உரிமையாளர் வீரம்சந்த் கூறியுள்ளார். சில நிமிடங்களில், விருகம்பாக்கம் எல்.டி., காலனியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவர் கடைக்கு வந்தார்.
அவர், 'இந்த நபர், எனக்கு தெரிந்தவர் தான்; நம்பி பணம் தரலாம்' எனக் கூறியுள்ளார். இருவர் மீதும், வீரம்சந்திற்கு சந்தேகம் ஏற்பட்டது; நகைகளை வாங்கி சோதனை செய்தபோது, அவை போலி என்பது தெரிய வந்தது.
கார்த்திக் தன்னிடம் ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளின் விபரங்களை, வீரம்சந்த் எடுத்துப் பார்த்தார்.
ஜன., 23ம் தேதி முதல் நான்கு தடவையாக, 6.68 லட்சம் ரூபாய்க்கு, 125 சவரன் நகைகளை, கார்த்திக் அடகு வைத்துள்ளது தெரிய வந்தது. அவற்றை சோதனை செய்தபோது, அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
விருகம்பாக்கம் போலீசாருக்கு, வீரம்சந்த் தகவல் கொடுத்தார். போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் அறிமுகம் செய்தவர், அம்பத்துாரைச் சேர்ந்த குஷால் கோட்டாடியா, 28, என்பதும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், போலி நகைகளை அடகு வைக்க, அவ்வப்போது கொடுத்து அனுப்புவதாகவும் தெரிந்தது. கிடைக்கும் பணத்தில், இந்த இருவருக்கும் ராமகிருஷ்ணன், 'கமிஷன்' தொகையும் கொடுத்துள்ளார்.
தற்போது, ராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.