/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதையில் ஆபாச பேச்சு மகனை கொன்ற தாய் கைது
/
போதையில் ஆபாச பேச்சு மகனை கொன்ற தாய் கைது
ADDED : மார் 18, 2024 03:38 AM
சென்னை, : மது போதையில் தகராறு செய்த மகனை கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.
மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 57; வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகன் வெங்கடேசன், 37; பந்தல் அமைக்கும் பணி செய்தார்.
வெங்கடேசன் மதுவிற்கு அடிமையானதால், கடந்த 9 மாதங்களுக்கு முன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றனர்.
கடந்த 15ம் தேதி, வெங்கடேசன் சுயநினைவின்றி உள்ளதாக அவரது தாய் சாந்தி, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில், ஏற்கனவே வெங்கடேசன் இறந்தது தெரிந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சாந்தி அளித்த புகாரின்படி, இயற்கை மரணம் என, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில், வெங்கடேசன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிந்தது.
தொடர் விசாரணையில், வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரை விற்று, அதில் கிடைத்த பணத்தில் வெங்கடேசன் மது அருந்தியுள்ளார்.
அத்துடன், கடந்த 14ம் தேதி, மது போதையில் வீட்டிற்கு வெளியே ரகளை செய்துள்ளார். அப்போது தாய் சாந்தி, வெங்கடேசன் தலையில் கட்டையால் அடித்து, உள்ளே அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, தாயை ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். இதையடுத்து சாந்தி, வெங்கடேசன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், மகனை கொன்ற சாந்தியை கைது செய்தனர்.

