/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி பலாத்கார வழக்கில் தாயின் 2வது கணவருக்கு ஆயுள்
/
சிறுமி பலாத்கார வழக்கில் தாயின் 2வது கணவருக்கு ஆயுள்
சிறுமி பலாத்கார வழக்கில் தாயின் 2வது கணவருக்கு ஆயுள்
சிறுமி பலாத்கார வழக்கில் தாயின் 2வது கணவருக்கு ஆயுள்
ADDED : அக் 25, 2025 10:43 PM

செங்கல்பட்டு: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், சிறுமியின் தாயின் 2வது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை, கிண்டி மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தாயுடன், கண்பார்வை குறைபாடுள்ள ,15 வயது சிறுமி வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தை, தாய் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சிறுமியின் தாய் சாமுவேல்,37, என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் 2020ம் ஆண்டு செப்., மாதம் சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தபோது, சாமுவேல் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்தார்.
இதை சிறுமியின் தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே இதுபற்றி, சிறுமி தாயிடம் கூறாமல் இருந்தார்.
இதை சாதகமாக பயன்படுத்திய சாமுவேல் அக்., 6ம் தேதி சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, கிண்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சாமுவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

