/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர மண் திட்டுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோர மண் திட்டுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 10, 2025 01:10 AM

சிங்கபெருமாள் கோவில்: செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில் திருவடிசூலத்தில் சாலையில் செம்மண் படிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்ற னர்.
செங்கல்பட்டு -- திருப்போரூர் நெடுஞ்சாலை 25 கி.மீ., உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன் படுத்தி வருகின்றனர். இந்த சாலை 2019ம் ஆண்டு நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட் டது.
இந்த சாலையை ஒட்டி உள்ள திருவடிசூலம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக ஏரி மண் எடுக்கப்பட்டு லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதிகளவில் மண் லோடு ஏற்றிச் செல்வதால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் செம்மண் குவிந்துள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலையில் மண் திட்டுக்களாக உள்ளதால் இந்த பகுதியில் வாகனங்களை இயக்கவே அச்சமாக உள்ளது.
தார்பாய் மூடாமல் செல்வதால் மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. எனவே விபத்துக்களை தடுக்க சாலையில் பரவி உள்ள மண் திட்டுக்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

