/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேடியல் சாலையில் மண் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
ரேடியல் சாலையில் மண் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ரேடியல் சாலையில் மண் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ரேடியல் சாலையில் மண் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 24, 2025 03:38 AM

பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையிலான ரேடியல் சாலையில், பல மீட்டர் துாரத்திற்கு பரவியுள்ள மண் குவியலால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல்லாவரத்தில் இருந்து ஜி.எஸ்.டி., - ராஜிவ்காந்தி சாலைகளுடன், பரங்கிமலை - மடிப்பாக்கம், வேளச்சேரி - மேடவாக்கம் சாலைகளை இணைத்து, ஒரு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, 2003ல், 10.6 கி.மீ., நீளத்திற்கு, நான்கு வழிப்பாதை கொண்ட ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்கு கடற்கரை, ராஜிவ்காந்தி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விரைவாக, ஜி.எஸ்.டி., சாலையை அடைகின்றன.
அதேபோல், பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்துார், மீனம்பாக்கம், பூந்தமல்லி, பம்மல் போன்ற சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், இதன் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்கின்றனர்.
அதிக அளவில் போக்குவரத்து கொண்ட இச்சாலையில், வேல்ஸ் சிக்னல் அருகே, நாராயணா பள்ளி எதிரில், பல மீட்டர் துாரத்திற்கு சாலையின் பாதி பகுதி மண் குவியலாக உள்ளது.
அதிக அளவில் லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் மண், சாலையில் பரவிக் காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அவ்வப்போது மண் குவியலில் சிக்கி, தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல் வோரே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அப்படியிருந்தும், மண் குவியலை அகற்றாமல், நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக உள்ளனர்.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், சாலையை சுத்தம் செய்து, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

