/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஐ.ஆர்., பணி: வருவாய் அலுவலர் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., பணி: வருவாய் அலுவலர் ஆய்வு
ADDED : நவ 24, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர், நேற்று ஆய்வு செய்தார்.
திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் கேளம்பாக்கம், படூர் ஊராட்சிகளில் இப்பணியை ஆய்வு செய்தார்.
அப்போது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியை பார்வையிட்டார்.
திருப்போரூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

