/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 26, 2025 04:49 AM

மறைமலை நகர், நவ. 26--
சிங்கபெருமாள் கோவில் -- கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் -- கொண்டங்கி சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை நெல்லிக்குப்பம் -- திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.
இந்த சாலையில் கருநிலம் கிராம எல்லை முடிவில் இருந்து கொண்டங்கி வரை மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை அதிக அளவில், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாததால் சென்று வர சிரமமாக உள்ளது.
மேலும், ஊரைக் கடந்த பின் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் ஏரி உள்ளது. சில நேரங்களில் தனியே வருவோரை மர்ம நபர்கள் தாக்கி, மொபைல்போனை பறித்துச் செல்கின்றனர். எனவே, இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

