/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் கணக்கீட்டு படிவம் பணியை விரைவாக முடிக்க உத்தரவு
/
வாக்காளர் கணக்கீட்டு படிவம் பணியை விரைவாக முடிக்க உத்தரவு
வாக்காளர் கணக்கீட்டு படிவம் பணியை விரைவாக முடிக்க உத்தரவு
வாக்காளர் கணக்கீட்டு படிவம் பணியை விரைவாக முடிக்க உத்தரவு
ADDED : நவ 26, 2025 04:49 AM

செங்கல்பட்டு, ந
செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைவாக முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு கலெக்டர் சினேகா நேற்று உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில், சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது; டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச., 9ம் தேதி வெளியிடப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் உள்ள 27 லட்சத்து 87,362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கினர்.
அதன்பின், கணக்கீட்டு படிவங்கள் திரும்பப்பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அடிக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வினியோகம் செய்து திரும்பப்பெறும் பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, திருப்போரூர் அடுத்த நாவலுார் ஊராட்சியில் ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை திரும்பப்பெறும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

