/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் கால்நடை மருத்துவமனை அவசியம்
/
வேடந்தாங்கலில் கால்நடை மருத்துவமனை அவசியம்
ADDED : நவ 26, 2025 04:48 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சியில், புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில் சித்தாத்துார், துறையூர், விநாயகநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகள் வளர்த்தும், கூலித் தொழிலாளர்கள் வெள்ளாடுகள் வளர்த்தும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு நோய் தாக்கும் போதும், மாடுகள் கன்று ஈனும் நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால், 15 கி.மீ. துாரமுள்ள மதுராந்தகம் கால்நடை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி உள்ளது.
கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து செலவினம் ஏற்படுவதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
எனவே, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.
வேடந்தாங்கல், விநாயக நல்லுார், துறையூர், சித்தாத்துார் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதிக அளவில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களது கால்நடைகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் போது, மதுராந்தகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது சிரமமாக உள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாஸ்கரன், விநாயகநல்லுார்.

