/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 05, 2025 09:47 PM
செய்யூர்: செய்யூர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் பகுதியில் பவுஞ்சூர் அடுத்த விழுதமங்கலம் கிராமத்தில், முதுகரை- கூவத்துார் நெடுஞ்சாலையில், படாளம் - -அரியனுார் இடையே செல்லும் சாலை சந்திப்பு உள்ளது.
தினசரி இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்து என நுாற்றுக்கணக்கான வாகனங்கள், சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன.
இப்பகுதி சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் சாலை சந்திப்பு இருளில் மூழ்கி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
அதேபோல, தொழுப்பேடு - சூணாம்பேடு சாலையில் புத்திரன்கோட்டை சாலை சந்திப்பு மின்விளக்கு வசதியில்லை.
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் சாலை சந்திப்பு; மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் நெடுஞ்சாலையில், செய்யூர் சாலை சந்திப்பு என, முக்கிய சாலை சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, முக்கிய சாலை சந்திப்புகளில், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

