/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலிவந்தபட்டு சாலையை புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கலிவந்தபட்டு சாலையை புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கலிவந்தபட்டு சாலையை புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கலிவந்தபட்டு சாலையை புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 10, 2025 11:07 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் அருகே, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கலிவந்தபட்டு சாலையை, புதிதாக அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கலிவந்தபட்டு- - மறைமலை நகர் சாலை 4 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை கலிவந்தபட்டு, கடம்பூர், கூடலுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை கடம்பூர், கலிவந்தபட்டு, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக சேதமடைந்து, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, விபத்துகள் ஏற்பட்டதால், புதிதாக சாலை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து 2023ல், நகராட்சி பொது நிதியில் இருந்து, 51.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்க,'டெண்டர்' விடப்பட்டது.
ஆனால், இப்பணிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை சாலை அமைக்கும் பணிகளை துவக்கவில்லை.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சாலையில் இருந்த பள்ளங்களில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.
தற்போது, இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயமடைவது தொடர்கிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளத்தில், ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளன. இந்த கற்கள் வாகனங்களின்,'டயர்'களில் குத்தி பஞ்சராவதால், உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
நாளி தழ்களில் செய்தி வந்தால், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல், அதிகாரிகள் கண்துடைப்பு பணிகளையே செய்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை புதிதாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

