/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலத்தின் சிமென்ட் தடுப்புகள் சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 30, 2025 11:33 PM

சூணாம்பேடு:புதுப்பட்டில், நீர்வரத்து கால்வாயை கடக்கும் பாலத்தில் சேதமடைந்துள்ள சாலையோர சிமென்ட் தடுப்புகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூணாம்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தில், சூணாம்பேடு - திண்டிவனம் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
புதுப்பட்டு, சூணாம்பேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திண்டிவனம், மரக்காணம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
புதுப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, நீர்வரத்து கால்வாயை கடக்கும் பாலம் உள்ளது.
இந்த பாலம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, முறையான பராமரிப்பு இல்லாமல், பாலத்தின் சிமென்ட் தடுப்புகள் சேதமடைந்துள்ளன.
இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பாலத்தின் சிமென்ட் தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.