/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டரை - ஒரகடம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
தண்டரை - ஒரகடம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
தண்டரை - ஒரகடம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
தண்டரை - ஒரகடம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 11, 2025 10:34 PM

திருப்போரூர்: கடுமையாக சேதமடைந்துள்ள தண்டரை - ஒரகடம் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கியது தண்டரை - ஒரகடம் சாலை.
சுற்றுவட்டார பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், இச்சாலையில் உள்ள தனியார் கல்லுாரி, பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவ - மாணவியர், பணியாளர்கள் சென்று வருகின்றனர்.
இந்த தண்டரை - ஒரகடம் சாலையில், 1 கி.மீ., துாரம் கடுமையாக சேதமடைந்து உள்ளது.
மழை நேரத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, அதில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

