/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓதியூரில் சாலை பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
/
ஓதியூரில் சாலை பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜன 19, 2025 02:57 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சியில் 21 வார்டுகள் உள்ளன.
பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேருராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் பகுதியில் சாலை சேதமடைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இடைக்கழிநாடு பேரூராட்சி டார்மன்ட் நிதியின் கீழ் இளந்தோப்பு முதல் ரெட்டியார் தோப்பு வரை உள்ள சாலை மற்றும் கன்னி கோவிலில் இருந்து துர்கை விஷ்னு கோவில் வரை சாலை சீரமைக்க கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது.
கடந்த7 மாதங்ளுக்கு முன் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், ஜல்லிகள் கொட்டி நிரவப்பட்டு சாலை பணி திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த 6 மாதங்களாக புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், தினசரி சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எதிர்பார்கின்றனர்.

