/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெரு விளக்குகள் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
தெரு விளக்குகள் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
தெரு விளக்குகள் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
தெரு விளக்குகள் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 26, 2024 02:29 AM

மறைமலை நகர்,
பாலுார் - ரெட்டிப்பாளையம் சாலை, 4 கி.மீ., துாரம் உடைய மாநில நெடுஞ்சாலை. இந்த சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை, ரெட்டிப்பாளையம், பாலுார், கொளத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து செல்லும் லாரிகளும், அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம், ஊராட்சி நிர்வாகம் சார்பில், வாகன ஓட்டிகள் வசதிக்காக, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெரு விளக்குகள், இரண்டு ஊராட்சி சார்பில் குறிப்பிட்ட துாரம் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
இடைப்பட்ட 1 கி.மீ., துாரம் விளக்குகள் இல்லாததால், அந்த பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், இந்த சாலையில், பல இடங்களில் வளைவுகள் உள்ளதால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேலும், புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது. எனவே, விடுபட்ட பகுதியில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.