/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
கூவத்துார் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கூவத்துார் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கூவத்துார் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 11, 2024 12:34 AM

கூவத்துார்,:கூவத்துார் அருகே உடல்காரக்குப்பம் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இச்சாலை மதுராந்தகம், பவுஞ்சூர், கூவத்துார், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன.
மேலும், இப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு அதிகப்படியான லாரிகள் வந்து செல்வதால், சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சேதமடைந்து உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் ஏறி, இறங்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றனர் என, அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.