/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை சீரமைப்பு பணிகள் மந்தம் மணப்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை சீரமைப்பு பணிகள் மந்தம் மணப்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
சாலை சீரமைப்பு பணிகள் மந்தம் மணப்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
சாலை சீரமைப்பு பணிகள் மந்தம் மணப்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 12, 2025 11:44 PM

சூணாம்பேடு, மணப்பாக்கத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சூணாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், புதுப்பட்டு செல்லும் தார்ச்சாலை உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை மணப்பாக்கம், புதுப்பட்டு, விளாம்பட்டு, புதுக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் விவசாய வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், நபார்டு நிதி உதவியின் கீழ், 69 லட்சம் ரூபாயில், சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
ஆனால், சாலை சீரமைப்புப் பணிகள் மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லி கற்களால் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.