/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரதான சாலையில் மரண குழிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பிரதான சாலையில் மரண குழிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பிரதான சாலையில் மரண குழிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பிரதான சாலையில் மரண குழிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 20, 2025 01:23 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலையில், பல இடங்களில் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் மரண குழிகள் உள்ளன. இவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் வரையிலான 11 கி.மீ., துார சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
பெருமாட்டுநல்லுாரிலிருந்து கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கும் குழாய், இந்த சாலையின் அடிப்பகுதி வழியாக செல்கிறது.
சில மாதங்களுக்கு முன், இந்த குடிநீர் குழாயில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, சாலையின் பல இடங்களில் நீர் கசிந்து வெளியேறியது.
அதனால், சாலையில் சிறிய பள்ளங்கள் உருவாகின. பின், தொடர் வாகன போக்குவரத்தால், அவை மரண குழிகளாக மாறி, தற்போது வாகன ஓட்டிகளை விபத்திற்கு ஆளாக்கி வருகின்றன.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சிறிய அளவில் நீர் கசிந்து வெளியேறி, சாலை ஓரமாக உள்ள வடிகாலில் கலந்தது.
அதை உடனே சரி செய்ய கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை.
தற்போது, அந்த பள்ளங்கள் யாவும், மரண குழிகளாக மாறிவிட்டன.
சில இடங்களில், ஓர் அடி ஆழத்தில் குழிகள் உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழிகளில் விழுந்து, காயமடைவது தினமும் அரங்கேறுகிறது.
பேருந்துகள் இந்த பள்ளத்தில் இறங்கி, ஏறும் போது, உள்ளே அமர்ந்திருக்கும் பயணியர், இருக்கையிலிருந்து கீழே விழுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலையை முழுமையாக ஆய்வு செய்து, எங்கெல்லாம் நீர் வெளியேறுகிறது, பள்ளம் மற்றும் குழிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அந்த இடங்களில் தேவையான புனரமைப்பு பணிகளை விரைந்து செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.