/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த பெருக்கரணை சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சேதமடைந்த பெருக்கரணை சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த பெருக்கரணை சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த பெருக்கரணை சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 01:55 AM

சித்தாமூர்,:பெருக்கரணை காலனிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
சித்தாமூர் அடுத்த பெருக்கரணை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து புதுார் வழியாக பெருக்கரணை காலனி பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.
தினசரி இருசக்கர வாகனம், கார், லாரி என ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதில் 700 மீட்டர் நீளத்திற்கு சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், சாலையில் செல்லும் மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர் சிரமப்படுகின்றன்றனர்.மேலும் மழைகாலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், புதிதாக சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெருக்கரணை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.