/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மோட்டாரில் உறிஞ்சப்படும் குடிநீர் சித்தாமூரில் தொடரும் பற்றாக்குறை
/
மோட்டாரில் உறிஞ்சப்படும் குடிநீர் சித்தாமூரில் தொடரும் பற்றாக்குறை
மோட்டாரில் உறிஞ்சப்படும் குடிநீர் சித்தாமூரில் தொடரும் பற்றாக்குறை
மோட்டாரில் உறிஞ்சப்படும் குடிநீர் சித்தாமூரில் தொடரும் பற்றாக்குறை
ADDED : பிப் 13, 2024 04:22 AM

சித்தாமூர், : சித்தாமூர் கிராமத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஐந்து மாதங்களுக்கு முன், ஜே.ஜே.எம்., குடிநீர் திட்டத்தின் மூலம், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 230 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.
வேலன் தெருவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில், இணைப்பு வழங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை தண்ணீர் வரவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வேலன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
இந்த ஐந்து மாதங்களாக, எங்கள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் வருவது இல்லை. அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், குழாயில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதால், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை.
இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.