/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 19, 2024 09:45 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பெருந்தண்டலம் ஏரியிலிருந்து அள்ளப்படும் மண், லாரிகள் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கும்கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலை, வளர்குன்றம் அருகே மண் லோடுடன் செல்லும் லாரிகளால் சாலையில் மண் குவியல் ஏற்படுகிறது. இதனால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
அதேபோல், ஏரியில்இருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், மேலே முறையாக தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன.
இதனால், காற்றில் மண் பறந்து, சாலையில் பயணிப்போரின் கண்களை பதம் பார்க்கிறது. அதனால், இப்பகுதியில் சிறு சிறு விபத்துகளில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

