/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் வீரர்கள் தேசிய நீச்சலில் சாதனை
/
முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் வீரர்கள் தேசிய நீச்சலில் சாதனை
முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் வீரர்கள் தேசிய நீச்சலில் சாதனை
முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் வீரர்கள் தேசிய நீச்சலில் சாதனை
ADDED : ஜூலை 02, 2025 11:29 AM

சென்னை: முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் நீச்சல் அகாடமி வீரர்கள், தேசிய நீச்சல் போட்டியில், பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
தேசிய அளவிலான, 78வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் கடந்த 22ம் தேதி துவங்கி, 26ம் தேதியில் நிறைவடைந்தது.
இதில், 50, 100, 200, 400, 800 மீட்டர், பட்டர்பிளை, பிரஸ்ட்ரோக், ப்ரீஸ்டைல், ரிலே உள்ளிட்ட மொத்தம் 20 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில், சென்னை முகப்பேர், எஸ்.டி.ஏ.டி., டால்பின் நீச்சல் அகாடமி சார்பில், எம்.எஸ்.யாதேஷ் பாபு, பவன் குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.எஸ்.யாதேஷ் பாபு, 50 மீ., 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், போட்டியின் துாரத்தை, 28.35 வினாடியில் கடந்து தங்கம் வென்று, வேகமான பிரஸ்ட் ஸ்ட்ரோக்கர் என்ற பட்டம் வென்றார்.
அதேபோல், 4x100 மீ., கலப்பு 'மெட்லே ரிலே'வில், 4:03.44 நிமிடத்தில் கடந்து, புதிய சாதனை படைத்ததுடன், தங்கமும் வென்றார். மேலும், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவிலும் வெண்கலம் வென்றார்.
எம்.எஸ்.பவன் குப்தா, 100 மீ., கலப்பு ப்ரீஸ்டைல் ரிலே வெண்கலம் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று அசத்திய இருவரையும், அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முரளிதரன், பயிற்சியாளர் ராணி அனிசியா ஆகியோர் பாராட்டினர்.