/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் மழை நீர் தேக்கம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
/
கூடுவாஞ்சேரியில் மழை நீர் தேக்கம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
கூடுவாஞ்சேரியில் மழை நீர் தேக்கம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
கூடுவாஞ்சேரியில் மழை நீர் தேக்கம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ADDED : நவ 29, 2024 12:43 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் அருகில், போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது. அதன் அருகில், வண்டலுார் தாலுகா அலுவலகம், கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
சமீபத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், உதவி கமிஷனர் அலுவலகம் முன் உள்ள சாலையில், மழை நீர் சீராக செல்ல வழியின்றி தேக்கமடைந்துள்ளது.
அதனால், இந்த சாலையை பயன்படுத்தும் அப்பகுதிவாசிகள், மிகுந்த சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கமிஷனர் அலுவலகம் முன், மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உதவி கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள சாலையை சீரமைத்து, மழை நீர் தேங்காதவாறு சீராக செல்ல, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.