/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது
/
தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது
ADDED : பிப் 18, 2024 05:33 AM
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்தகளத்துாரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 42. இவரது அண்ணன் விஜயகுமார் என்பவர், பொன்விளைந்தகளத்துார் ஊராட்சி தலைவராக இருந்து வந்தார்.
விஜயகுமார், கடந்த 2012ம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விஜயகுமார் கொலை வழக்கில் தொடர்புடைய குப்பன், துரைதாஸ், நித்யானந்தம், சந்துரு உள்ளிட்டோரை, அடுத்தடுத்த ஆண்டுகளில், சுரேஷ்குமார் படுகொலை செய்தார்.
அதன்பின், தலைமறைவாக இருந்து வந்த சுரேஷ்குமாரை பிடிக்க, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நேற்று, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சுரேஷ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.